ராகுல்காந்தி தமிழ்நாட்டில் நுழைய ப்ளான் பண்றார்..? – அண்ணாமலை கருத்து
தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என ராகுல்காந்தி பேசியதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நீட் குறித்து தமிழக அரசு இயற்றிய மசோதா கிடப்பில் இருப்பது குறித்து திமுக எம்.பிக்கள் குரலெழுப்பி வந்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி, பாஜகவால் ஒருநாளும் தமிழகத்தை ஆள முடியாது என பேசியது வைரலானது. இதுகுறுத்து கேட்டபோது பிறப்பால் இல்லாவிட்டாலும் நானும் ஒரு தமிழன்தான் என ராகுல்காந்தி பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கும். திமுகவின் நீட் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. நாளை நடைபெற உள்ள நீட் குறித்த அனைத்து கட்சி ஆலோசனையில் பாஜக பங்கேற்காது. ராகுல்காந்திக்கு கேரளாவில் மவுசு குறைந்து விட்டதால் தமிழகத்தில் நுழைய திட்டமிடுகிறார்” என பேசியுள்ளார்.