வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (07:43 IST)

முதல்வர் ஸ்டாலினும் சிறை செல்வது உறுதி: மதுரையில் அண்ணாமலை பேட்டி

மெட்ரோ முறைகேடு குறித்து விசாரணை செய்தால் முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறை செல்வது உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
 வேலை வாங்கித் தரும் விவகாரம் குறித்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். 
 
அப்போது செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு முதலமைச்சரின் நடவடிக்கை சரியாக இல்லை என்றும் பாஜக தொண்டர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுகிறார் என்றும் கனிமொழி கைது செய்யப்பட்டபோது கூட இப்படி அவர் கோபப்பட்டது இல்லை என்றும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு ஏன் இவ்வளவு கோபப்படுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
மேலும் சென்னை மெட்ரோ முறைகேடு புகாரை சிபிஐ விசாரணை செய்தால் முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறை செல்வது உறுதி என்றும் அதற்கு பயந்து தான் அவர் சிபிஐக்கு வழங்கப்பட்ட போது அனுமனையை அனுமதியை திரும்ப பெற்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva