ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:56 IST)

செல்லூர் ராஜூ நல்ல வார்த்தைகள் பேசினால் அன்று மழை வந்துவிடும்: அண்ணாமலை

செல்லூர் ராஜு எப்போதும் ஆபாசமாக தான் பேசுவார், அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வந்துவிட்டால் அன்று மழை வந்துவிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடந்த சில மாதங்களாக அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் படுமோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலை குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் செல்லூர் ராஜுவின் அநாகரீகமான பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்லூர் ராஜு வாயிலிருந்து ஆபாசமான வார்த்தைகள் வருவது இயல்பான ஒன்றுதான், அவர் நல்ல வார்த்தைகள் பேசினால் அன்று மழை வந்துவிடும்

மக்களிடம் அதிமுக காணாமல் போய்வரும் நிலையில் இது போன்ற பேச்சுக்கள் தேவையில்லாதது என்று கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு செல்லூர் ராஜு என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva