1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:48 IST)

அண்ணாமலையை பார்த்து டெல்லி தலைமை ஏமாந்து வருகிறது: பாமக பிரமுகர் கருத்து..!

Annamalai
அண்ணாமலையை பார்த்து டெல்லி தலைமை ஏமாந்து வருகிறது என பாமக பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார் 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் நிற்கப் போகிறோம்? என்பதெல்லாம் கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய திலகபாமா எங்கள் கட்சி வலிமையானது என்பதால் கால அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது என்று தெரிவித்தார் 
 
அண்ணாமலை குறித்து அவர் கூறிய போது ’அண்ணாமலை நடத்தியது போலியான பாதயாத்திரை என்றும் இயற்கையாகவும் எதார்த்தமாகவும் இல்லை என்று கூறியவர் அண்ணாமலையை துடிப்பான தலைவராக பார்த்து டெல்லி தலைவை ஏமாந்து வருகிறது என்றும் செல்லூர் ராஜூ கூட தான் அதிக மக்களிடம் போய் சேர்ந்தார், ஆனால் அதற்காக அவரை பாசிட்டிவாக பார்ப்பதா என்றும் அவர் கூறினார் 
 
நான் கூட ஐபிஎஸ் படித்தவர் என்பதால் அவரிடம் அதிகமாக எதிர்பார்த்தேன் என்றும் ஆனால் ஏமாந்து விட்டேன் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva