திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 25 மார்ச் 2023 (08:44 IST)

சட்டத்தின் அடிப்படையில் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம்: அண்ணாமலை விளக்கம்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம்  செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சட்டத்தின் அடிப்படையில் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் சட்டத்தின் அடிப்படையில் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்
 
மேலும் சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அதே தான் ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran