அறிவாளிகள் கூட அடிமைகளாய் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும்: பிடிஆர் குறித்து அண்ணாமலை
அறிவாளிகள் கூட அடிமைகளாக இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், துணை முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடிய போது, அவருக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்து பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை சமீபத்தில் கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை படித்து இதற்குத்தான் அமெரிக்காவில் படிக்கச் சென்றீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "இங்கு அறிவாளிகள் கூட அடிமையாய் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பிடிஆர் போன்ற அறிவார்ந்த அமைச்சரை கூட அடிமையாக வைத்திருப்பது தான் திமுக அரசியல்," என்றும் அவர் தெரிவித்தார்.
"தனது சொந்த தொகுதியில் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பாராட்ட வேண்டும். அவரையும் உதயநிதியையும் ஒரே தராசில் வைத்து ஒப்பிடுங்கள். எனக்கும் அவருக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அவரை போன்றவர்களால் ஒரு கட்சியில் புதிய சிந்தனை உருவாகும்," என்று கோவையில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை கூறினார்.
Edited by Siva