ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (22:03 IST)

அண்ணாமலையின் ''என் மண் என் மக்கள்' தொடக்க நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அழைப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் தொடக்கவிழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும்  ’என் மண் என் மக்கள்' பாதயாத்திரை, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த  நிலையில், கடந்த 21 ஆம் தேதி , ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஊடக பிரிவு பற்றிய  அறிவிப்பு வெளியானது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரையை வரும் 28 ஆம்தேதி அமைச்சர் அமித்ஷா, ராமேஸ்வரத்தில்  தொடங்கி வைக்கவுள்ள நிலையில்,  அதன் தொடக்கவிழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.