1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (08:57 IST)

அமைச்சர் சொன்னது போல் நான் பொறுக்கி தான்: அண்ணாமலை

annamalai
அமைச்சர் தா.மோ தாமோதரன் சொன்னதுபோல் நான் பொறுக்கிதான் என நெல்லை மாவட்டத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்கள் 'அண்ணாமலை ஒரு பொறுக்கி என்றும் ஐபிஎஸ் ஆக இருந்தபோது ரவுடிகளை சிறையில் அடைத்தவர் தற்போது ரவுடிகளை தனது கட்சியில் சேர்த்து வருவதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்கள் கூறியது போல் நான் பொறுக்கி தான் என்றும் அமைச்சர் கூறியிருப்பதை நான் ஏற்று கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 
ஆனால் எப்படிப்பட்ட பொறுக்கி என்றால் திமுகவின் ஊழலை பொறுக்கி, திமுகவின் வன்முறையை பொறுக்கி, திமுகவின் அராஜகத்தை பொறுக்கி, ஒரு சாதாரண மனிதனாக பொறுக்கி பொறுக்கி எடுத்து வந்து மக்கள் மன்றத்தில் வைத்து கொண்டிருக்கின்றேன். அதற்காக எனக்கு பொறுக்கி என்ற பட்டம் கொடுத்தால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.