புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (11:11 IST)

டெல்லி கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று டெல்லி கிளம்பிய நிலையில் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். 
 
இதனையடுத்து இன்று டெல்லி கிளம்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது மத்திய அரசின் தாதா சாகேப் விருது தனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த விருது கிடைக்கும் நேரத்தில் பாலசந்தர் இல்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது என்றும் அவர் கூறினார் 
 
மேலும் விருதை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பிய உடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.