1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (17:12 IST)

கோவில் நிதியில் கலாசார மையமா: பா.ஜ., எதிர்ப்பு.. அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

கோவில் நிதியில் கலாச்சாரம் மையம் கட்டப்பட உள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். 
 
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கலாச்சாரம் மையம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து கோவில் நிலத்தில் கலாச்சாரம் மையம் அமைக்கும் முறைகேட்டை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.  
 
இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கலாச்சார மையம் முழுவதும் பக்தர்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுகிறது. 
 
கோவில் அறங்காவலர்கள் ஒப்புதல் பெற்றே நிதி பயன்படுத்தப்படுகிறது. திருக்கோவில் நிதியை பக்தர்களின் வசதிக்காக செலவிடுவது குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran