1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 27 டிசம்பர் 2023 (15:42 IST)

சனாதனத்தை ஒழிப்பதாக சொல்லும் கருணாநிதியின் பேரன் முடிந்தால் இதை செய்யட்டும்: அண்ணாமலை

Annamalai
சனாதனத்தை ஒழிப்பதாக சொல்லும் கருணாநிதியின் பேரன் உதயநிதி முடிந்தால் திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலின் ஒரே ஒரு செங்கலை அசைத்துப் பார்க்கட்டும் என்று அண்ணாமலை சவால் விட்டு உள்ளார். 
 
என்மன் என் மக்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இன்று அவர் திருவாரூரில் பேசினார். அப்போது திருவாரூர் ஆன்மீகத்துக்கு பெயர் போனது என்றும் கருணாநிதி பிறந்த இந்த ஊரில் அவருடைய பேரன் முடிந்தால் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலை  திருக்கோவிலில் ஒரே ஒரு செங்கலை அசைத்து பார்க்கட்டும் என்றும் மக்களோடு ஒன்றி இருக்கும் சனாதனத்தை ஒழிப்பது பற்றி பேசி பார்க்கட்டும் என்றும் தெரிவித்தார்.  
 
திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் கார் கண்ணாடியை கூட திறந்து பார்த்திராதவர் உதயநிதி என்றும் அவர் மேலும் பேசினார்.  
 
திருவாரூர் மண்ணில் இன்னும் தார் சாலையை கூட பார்க்காத கிராமங்கள் உள்ளன என்றும் இதுதான் திராவிட மாடலின் வளர்ச்சி என்றும் அவர் குற்றம் சாட்டினார்
 
Edited by Mahendran