1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (13:32 IST)

அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனு.. செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

Annamalai
மத வெறுப்புணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று நடந்த விசாரணையில் இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை எதிர்மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடையும் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எதிர் மனுதாரர் பதில் மனு அளிக்கவும், அண்ணாமலை விளக்க மனு அளிக்கவும் 6 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என அண்ணாமலை பேசியதை அடுத்து இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து தான் உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva