செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (16:58 IST)

தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்த அண்ணாமலை!

Annamalai
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு இன்னும் 20 நாட்கள் கெடு கொடுத்து அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த நிலையில் மாநில அரசும் குறைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது
 
இந்த நிலையில் இன்று கோட்டையை முற்றுகை இடுவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் கோட்டை அருகே போராட்டம் நடைபெற்றது 
இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்