ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (07:08 IST)

தென் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு..!

தென் மாவட்டங்களில் வயது வரும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருவதை அடுத்து வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது.

இந்த நிலையில் கனமழை எதிரொலியாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்  இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

Edited by Siva