திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 25 மே 2023 (14:43 IST)

தமிழ் வழி பாடங்கள் நிறுத்தப்பட்டது ஏன்? – அண்ணா பல்கலை. துணை வேந்தர் விளக்கம்!

Anna university
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் பலவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் படிப்புகளை தமிழ்வழியிலேயே கற்கும் விதமாக தமிழ்வழி பாடப்பிரிவுகள் சில அறிமுகப்படுத்தப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ்வழி பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் 10 கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் “தமிழ் வழிக்கல்வி என்பதால் இந்த பாடப்பிரிவுகள் நிறுத்தப்படவில்லை. பொதுவாகவே மெக்கானிக்கள் மற்றும் சிவில் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. தமிழ் வழிக்கல்வியில் சேர்க்கை குறைவாக உள்ள 10 கல்லூரிகளில் மட்டுமே பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிட கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருவதால் அடுத்த கல்வியாண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்தவும் திட்டம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K