வாடகைக்கு விடப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகம்
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இண்டர்நெட்டில் அனைத்து நூல்களும் தற்போது கிடைத்தாலும், நூலகம் சென்று சில அரிதான நூல்களை படிப்பதே ஒரு தனி அனுபவம்தான். அந்த வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 1,280 பேர் அமரக்கூடிய அரங்கு ஒன்று வாடகைக்கு விடப்படும் என்றும், தேவைப்படுவோர் இந்த அரங்கை வாடகை கொடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார்.
பிரமாண்டமாக அமைந்துள்ள இந்த அரங்கின் ஒரு நாள் வாடகை கட்டணம் ரூ 2.31 லட்சம் என்றும், குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு 60% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் பொது நூலக இயக்குனர் தெரிவித்துள்ளார்.