ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (07:26 IST)

கோவளம் - திநகர்.. கோவளம் - சைதாப்பேட்டை.. 2 புதிய பேருந்து சேவைகள் அறிமுகம்!

சென்னை அருகே உள்ள கோவளம் பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் தினந்தோறும் சென்று கொண்டிருக்கும் காரணத்தினால் தி நகரிலிருந்தும், சைதாப்பேட்டையில் இருந்தும் இரண்டு பேருந்து சேவைகள் கோவளத்திற்கு இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை கோவளத்தில் இருந்து தி நகர் வரை செல்லும் 19T மற்றும் கோவளத்திலிருந்து சைதாப்பேட்டை வரை செல்லும் 19 Gct ஆகிய இரண்டு புதிய பேருந்து சேவைகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.  19T கோவளத்தில் இருந்து முட்டுக்காடு, திருவான்மியூர், சைதாப்பேட்டை வழியாக தியாகராய நகர் செல்லும் என்றும்  19 Gct முட்டுக்காடு, பாலவாக்கம், மத்திய கைலாஷ், சின்னமலை வழியாக சைதாப்பேட்டை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சென்னையில் இருந்து கோவளம் செல்பவர்கள் இந்த பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஏற்கனவே கோயம்பேடு,பிராட்வே உள்பட சில பகுதிகளில் இருந்து கோவளத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சைதாப்பேட்டை மற்றும் தி நகரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva