திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (22:20 IST)

என் பேரன் கல்யாணத்துக்குள் ரஜினி அரசியலுக்கு வருவாரா? கலாய்க்கும் அன்புமணி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தமிழகமே பரபரப்புடன் உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் தற்போது கட்சியின் சின்னம், பெயர் குறித்த பரிசீலனையில் ரஜினி இருப்பதாகவும் கூறப்படுகிறது.



 


இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எம்பி கூறியுள்ளார்.

நேற்று ஈரோட்டில் நடந்த பாமக கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: , 'நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கல்யாணம் நடக்கும் போதே அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். பின்னர் என் மகள் கல்யாணம் நடந்த போது அவர் அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். போகிற போக்கை பார்த்தால் என் பேரன் கல்யாணம் நடக்கும் போதாவது அவர் அரசியலுக்கு வருவாரா? தெரியவில்லை' என்று கிண்டலுடன் பேசினார்.

அன்புமணி ராமதாஸை சமீபத்தில் ரஜினி புகழ்ந்து பேசியும் ரஜினியை அவர் கலாய்த்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.