ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (20:29 IST)

அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்; அன்புமணி ராமதாஸ்

anbumani
அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படாது என்றும், தொடர்ந்து செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். மாணவர் நலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
 
அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தவிர்க்க முடியாதவை. அதனால் தான் அந்த வகுப்புகள் மூடப்பட்டதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. பா.ம.க.வின் வலியுறுத்தலுக்குப் பிறகு  மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
 
கல்வி சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் நிலையில் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்; வல்லுனர்களின் கலந்தாய்வுக்குப் பிறகு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவதுடன் போதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்!