திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2024 (13:39 IST)

விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு பத்ம விருது.. அன்புமணி வாழ்த்து

vijayakanth
விஜயகாந்த் உள்பட 22 பேருக்கு பத்ம பூஷன் விருதும், மற்றும் பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷன் விருது பெற்றவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
 
2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம்  132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன்  விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜயந்திமாலா உள்ளிட்ட ஐவருக்கும்,  பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட  17 பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழ்நாட்டைச் சேர்ந்த  கலை ஆசிரியர் பத்ரப்பன், விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோ டி குரூஸ்,  மருத்துவர் நாச்சியார் ஆகிய ஐவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. அவர்களுக்கும், பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran