திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2022 (12:18 IST)

நீட் சட்டப் போராட்டத்தில் முதலமைச்சர் வெற்றி பெறுவார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Anbil
நீட் சட்டப் போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெறுவார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
நீட் தேர்வை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் மட்டும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது 
தமிழகத்தில் உள்ள பாஜக தவிர, அதிமுக திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று நீட் தேர்வு குறித்து கூறிய போது பல சட்ட போராட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றதைப் போல் நீட்தேர்வு சட்ட போராட்டத்திற்கு எதிராக முதலமைச்சரின் குரல் நியாயமான குரல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்