1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (12:45 IST)

மாதவிடாய் பற்றி பேசும் ’பீரியட்’ இந்திய குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது!

2019 ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவில் இந்திய பெண்களை பற்றிய படமான ' பீரியட் எண்ட் ஆப் சன்டன்ஸ் ’ என்ற குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.


 
திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யப்பட்டு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த ஆஸ்கர் விருது,  திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. 
 
இதில் பல்வேறு பிரிவின் கீழ் திரைத்துறைக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் இந்திய-ஈரானிய திரைப்பட இயக்குனர் ராய்கா ஜேடாப்ச்சி இயக்கிய 'ப்ரீயட்" படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. 
 
இப்படம் மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளையும் ,   மாதவிடாய் பிரச்னை காலத்தில், இந்திய கிராமத்து பெண்கள் என்ன மாதிரியான அவஸ்தைகளை சந்திக்கிறார்கள் என்பது பற்றியும் இந்த படம் பேசுகிறது.  கோவையில் படமாக்கப்பட்ட இந்த குறும்படம்,  கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. 
 
ராய்கா ஜெஹ்தாப்ஜி என்ற அமெரிக்க பெண் இயக்குனரால் உருவாக்கப்பட்ட இப்படத்தை . மெலிசா பெர்டான் என்பவர் தயாரித்தார் . சாம் டேவிஸ் ஒளிப்பதிவு செய்து எடிட் செய்த இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இன்று சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.