வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (11:26 IST)

உலகின் மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி இந்திய வாலிபர் சாதனை

உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா உலகிற்கு பல்வேறு சாதனையாளர்களை அறிமுகப்படுத்திய மிகப்பெரிய நாடாகும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்தவர். கூகுலின் தலைமைச் செயலதிகாரியாக திகழும் சுந்தர் பிச்சை இந்தியாவை சேர்ந்தவர். மேலும் பல்வேறு சாதனையாளர்களின் இருப்பிடமாக இந்தியா திகழ்கிறது. 
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம்  ஹால்டுவானியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரா உபாத்யே என்பவர்  5 மி.மீ நீளமும் 0.5 மி.மீ அகலமும் கொண்ட ஒரு சிறிய பென்சிலை உருவாக்கி இருக்கிறார். இந்த பென்சிலை உருவாக்க அவருக்கு 4 நாட்கள் தேவை பட்டதாக கூறியிருக்கிறார். இது உலகின் மிகச்சிறிய பென்சில் என்று சாதனை படைத்துள்ளது. இதேபோல் பல சாதனைகளை படைக்க் பிரகாஷை பலர் பாராட்டி வருகின்றனர்.