விபச்சாரத்துக்கு பெண் வேண்டும்; நடிகைக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய வாலிபர்
கன்னட முன்னணி நடிகை தீப்தி காப்சி, தனக்கு வந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீப்தி காப்சி. இவர் ஹனி ஹனி இப்பானி, ஜூவலம்தம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த குறுந்தகவல் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அவருக்கு வந்த குறுந்தகவலில், விபசார தொழிலுக்கு அழகான பெண்கள் இருந்தால் தனக்கு தெரியப்படுத்தவும் என்று இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த, இந்த செய்தியை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன். உங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றால் உங்கள் வீட்டு பெண்களை அணுகுங்கள். உங்கள் பணம் மிச்சமாகும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர் மன்னிக்கவும், எனது கணக்கு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தீப்தி அந்த நபர் மீது க்ரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.