வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (19:11 IST)

அதிமுக ஆயிரங்காலத்து பயிர்...இடைத்தேர்தல் வெற்றிக்கு முதல்வர் , துணைமுதல்வர் அறிக்கை!

அதிமுக ஆயிரங்காலத்து பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும் என அதிமுக இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து , ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மற்றும் துணைமுதல்வர் இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது :
 
’இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி.
 
இந்த வெற்றியின் மூலமாக மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்புடன் பணியாற்ற தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது.
 
ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரமாகும். 
 
கொள்கைகளில் சமரசமின்றி தமிழக உரிமைகளைக் காக்க மக்களின் வளமான வாழ்க்கைக்கு அரசு பணியாற்றும்.
 
மேலும், இடைத்தேர்தலில் அதிமுமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி , ஆயிரங்காலத்து பயிராக தழைத்து மக்கள் பணியாற்றுவோம் ‘என தெரிவித்துள்ளார்கள்.