செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (17:22 IST)

முத்தமிழ்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்

விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றிச் சான்றிதழ் பெற்றார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 1,13,766 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை, 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனது வெற்றி சான்றிதழை தற்போது முத்தமிழ் செல்வன் பெற்றார்.

இவரை தொடர்ந்து நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை, 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.