வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (20:11 IST)

முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி பட்டி டிங்கரிங் பார்க்கப்படும் சாலைகள்...

karur
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை கரூர் மாநகருக்கு முதல்வரான பின்னர் முதன் முதலாக வருகின்றார், திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக வரும் முதல்வருக்கு கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
 
இந்நிலையில், கிருஷ்ணராயபுரத்தில் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் மற்றும் பல பகுதியில், பல இடங்களில் மழை நீர் வடிகால் மூடி பழுதடைந்து உடைந்து உள்ளது. இதை பலமுறை மாற்றச் சொல்லி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை தமிழக முதலமைச்சர் இன்று வரும் நிலையில் இதே நிலை நீடிக்கிறது அது யார் நடவடிக்கை எடுப்பது என்று அந்த ஊர் மக்கள் சமூக வலைதளங்களில் செய்தியாக பரவியதையடுத்து,  தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்த பகுதியில் உள்ள  கழிவுநீர் சாக்கடை மற்றும் குட்டைகள் மூடப்படுவதோடு, கடந்த 1 வருடத்திற்கு மேலாக திமுக வில் வெற்றி பெற்ற பெண் எம்.எல்.ஏ விற்கு, இந்த பகுதி நினைவிற்கு வராத நிலையில், தமிழக முதல்வர் வருகைக்காக அந்த இடங்கள் சரி செய்யப்பட்டதோடு, போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.