10 ஆண்டுகளில் 40,000 கி.மீ.. சைக்கிளில் உலகை சுற்றி வரும், 61 வயது அமெரிக்கர்
சைக்கிளில் உலகை சுற்றி வரும், 61 வயது அமெரிக்கர் ரிச் ஹேகெட் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகை சுற்றிப் பார்க்க முடிவு செய்து கடந்த 1991ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய அமெரிக்கர் ரிச் ஹேகெட், இதுவரை 120 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார்.
2013ம் ஆண்டு வரை அவர் சைக்கிளில் 40,000 கி.மீ-க்கு மேலாக பயணித்துள்ளார். சராசரியாக ஒரு நாளைக்கு 80-125 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சைக்கிளில் உலகை சுற்றி வரும் ரிச் ஹேகேட் தற்போது தமிழகம் வந்துள்ளார். கரூர் வழியாக பெங்களூர் செல்ல உள்ளதாகவும், போகும் இடங்களில் ஹோட்டல்களில் தங்கி செல்வதாக அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து பல நேரங்களில் சொந்த உணவை சமைத்து சாப்பிட்டு வருவதாகவும் ஒருசில பகுதிகளில் உள்ள முக்கிய உணவுகளை ருசித்து சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran