வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2024 (11:39 IST)

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

vijay thiruma
நடிகர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடந்தது. இதில், விஜய் ரசிகர்கள் 8 லட்சம் பேர் கலந்து கொண்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் ஆளும் திமுகவிற்கு எதிராக பேசியிருந்தார் விஜய்.

பெரியார், அண்ணா பெயரை சொல்லிக்கொண்டு ஊழல் செய்து கொள்ளையடிக்கும் குடும்ப ஆட்சி என கடுமையாக விமர்சித்தார். மேலும், பாஜகவே தனது கொள்கை எதிரி என மறைமுகமாக சொன்னார். விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜயின் அரசியல் பார்வை குறித்து அரசியல் பிரமுகர்கள் பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில் விஜய் பேசியது பற்றி கருத்து கூறிய தொல்.திருமாவளவன் ‘அவரின் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை பார்க்கும்போது மக்கள் அவரை நம்புகிறார்கள். பெரியார், அம்பேத்காரை முன்னிறுத்தியது, பெரியார் திடலில் விஜய் அஞ்சலி செலுத்தியது எல்லாவற்றையும் வரவேற்கிறேன்.

விஜயின் 45 நிமிட உரை அவர் அரசியலுக்கு தகுதியானவர்தான் என காட்டுகிறது. அதேநேரம், அவரை வழிகாட்டியவர்கள் அவரை குழப்பி விட்டிருக்கிறார்கள். அதிகாரத்திற்கு வர வேண்டும் என்றுதான் கட்சியை துவங்குகிறார்கள். ஆட்சிக்கு வரவேண்டுமெனில் ஆட்சியாளர்களை எதிர்க்க வேண்டும். அதைத்தான் விஜய் செய்திருக்கிறார். ஆனால், விஜய் ஆட்சியை பிடிக்க முடியாது. விஜயின் பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லை.

பெரும்பான்மை, சிறுபான்மை பற்றி அவர் பேசியது பேலன்ஸ்டாக இருந்தது. அந்த கருத்தில் தெளிவு இல்லை. சாதிய ஒடுக்குமுறை பற்றி விஜய் பேசவில்லை. விஜய் கிறிஸ்துவர் என்பதால் சிறுபான்மை அரசியல் பேசினால் தன்னை பிராண்ட் செய்து விடுவார்கள் என விஜய் நினைக்கலாம்.

அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயசமா? என கேட்கிறார். அவருக்கு சரியான புரிதல் இல்லை. பாசிசத்தை எதிர்ப்பவர்களை பார்த்து நீங்களும் பாசிஸ்ட்தான் என அவர் சொல்வது போல இருக்கிறது. பாசிசத்தை எதிர்ப்பவர்கள் எப்படி பாசிஸ்ட்களா என்கிற கேள்வி எழுகிறது. விஜயின் பேச்சு பாஜகவை எதிர்க்க தேவையில்லை என சொல்வது போல இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது துணிச்சலான நிலைப்பாடு. அதை வரவேற்கலாம். அரசியலில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசலாம். சில விஷயங்களை மறைவாக செய்ய வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்.