1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (16:18 IST)

அதிமுகவே இருக்காது என்ற அழகிரி தற்போது திமுகவிலே இல்லை: ஆர்.பி உதயகுமார்

திமுகவில் தொலைந்த முகவரியை மு.க.அழகிரி தேடி கொண்டிருக்கிறார் என்று அதிமுக அமைச்சர் ஆர்.,பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 
திமுகவில் இருந்த நிக்கப்பட்ட மு.க.அழகிரி திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவரா? என்ற கேள்வி தமிழகம் முழுவது உள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழகரியை கட்சியில் சேர்க்கும் முடிவில் இல்லை என்று கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் கட்சியில் உள்ள தனது ஆதரவை நிரூபிக்க அழகிரி செப்டம்பர் 5ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளார். இந்நிலையில் அழகிரி திமுகவில் இடம்பெறுவது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
குறிப்பாக அதிமுக சார்பில் இருந்து பல்வேறு விமர்சனங்களும், கருத்துகளும் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
 
அழகிரி திமுகவில் முகவரி இல்லாமல் உள்ளார். திமுகவில் அடைக்கப்பட்ட கதவுகளை திறக்கவே தனது தொண்டர்களை சந்திக்க உள்ளார். 2011க்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்றார். ஆனால் தற்போது அவர் திமுகவிலேயே காணாமல் போய்விட்டார் என்று கூறியுள்ளார்.