திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (15:49 IST)

நீட் பாதிப்பு: ஏகே ராஜன் குழுவின் 3வது கட்ட ஆலோசனை!

தமிழகத்தில் நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் என்பவரது தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஒரு மாதத்தில் முதல் அமைச்சரிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏகே ராஜன் தலைமையிலான குழு ஏற்கனவே இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தியது என்பதும் இந்த குழுவினர்களிடம் ஏராளமானோர் நீட் தேர்வு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நீட் தேர்வு வேண்டாம் என்று எந்த அளவுக்கு கருத்துக்கள் வெளியானதோ, அதேபோல் நீட்தேர்வு வேண்டும் என்றும் பலர் கருத்து கூறி இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தாக்கம் குறித்து ஏகே ராஜன் குழுவின் மூன்றாவது கட்ட ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் அவர்களது கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும் என்று தெரிந்தும் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது