வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (22:40 IST)

மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிரபல நடிகர் !

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே சமீபத்தில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. இந்நிலையில் இன்று ஒரு சில தளர்வுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரபலநடிகரும், சேப்பாக்கம் –திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு மளிகை சாமான் உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்தார். இதுகுறித்து அவர்தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம், புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்த ஏழை - எளிய மக்களுக்கு அரிசி-பருப்பு-மளிகை சாமான் உள்ளிட்ட கொரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்களையும், இரவு உணவையும் வழங்கினேன். இந்த நிகழ்வின்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன்@Dayanidhi_Maran
, பகுதி செயலாளர் அண்ணன்@madhanmohandmk , வட்ட செயலாளர் அண்ணன் பி.பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.