வியாழன், 18 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 நவம்பர் 2025 (12:08 IST)

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த சம்பவம் குறித்து நடிகர் அஜித் கூறியபோது "கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. ரசிகர்களின் அளவு கடந்த வெறித்தனமான அன்புதான் இத்தகைய நிகழ்வுகளுக்குக் காரணம் என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கரூர் சம்பவம் குறித்த அஜித்தின் கருத்து குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அவர் பதிலளித்தபோது, "இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பே பதில் அளித்துள்ளார், நானும் தெளிவாக பேட்டி அளித்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது." என்று கூறினார்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதுகுறித்து இப்போது கருத்து கூற விரும்பவில்லை. நடிகர் அஜித்தின் பேட்டியை நான் முழுமையாக பார்க்கவில்லை. ஆனால், அது அவருடைய சொந்த கருத்து. அது எந்த கருத்தாக இருந்தாலும் பாராட்டத்தக்கது" என்று தெரிவித்தார்.

Edited by Siva