1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 நவம்பர் 2025 (14:14 IST)

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!

பிரபாஸின் அடுத்த பேன் இந்தியா படம் ‘ஸ்பிரிட்’… 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டம்!
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனிமல் படம் ஆணாதிக்கக் கருத்துகள் விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

அடுத்து அவர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஒரு காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தீப்தி டிம்ரி, விவேக் ஓப்ராய் ஆகியோர்களோடு கொரிய நடிகர் டான் லீயும் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை 100 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சந்தீப். அதற்காக படப்பிடிப்புத் திட்டங்களைத் தீட்டிவருகிறாராம்.