வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (14:41 IST)

மீண்டும் ஏர்செல் சேவை பாதிக்க வாய்ப்பு; வாடிக்கையாளர்கள் எச்சரிக்கை

இன்று மாலை மீண்டும் ஏர்செல் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என்று ஏர்செல் தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாரயணன் தெரிவித்துள்ளார்.

 
ஏர்செல் நிறுவனம் ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த வாரம் இரண்டு நாட்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் ஏர்செல் நிறுவனம் தெரிவித்தது.
 
இதையடுத்து ஏர்செல் சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் எண் மூலம் வேறு நெர்வொர்க்கு மாற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் இன்று மாலை ஏர்செல் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் என்று தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாரயணன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
டவர் நிறுவனங்கள் மீண்டும் பிரச்சனை எழுப்பியுள்ளதால் இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் எற்படலாம். இதனால் ஏர்செல் சிம் கார்டுகளை மட்டுமே வைத்துள்ளவர்கள் ஆன்லைன் பரிமாற்றம் உள்ளட்டவைகளை மாலைக்குள் செய்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.