ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (21:44 IST)

விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ சேவை தொடக்க தேதி, கட்டண விபரம் அறிவிப்பு

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் தற்போது ஒருசில பகுதிகளில் இயங்கி வருவதால் சாலை போக்குவரத்தில் டிராபிக் பெருமளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து, சென்னை விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, வரும் 10ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் பயணம் செய்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான கட்டண விபரம் குறித்த அறிவிப்பு ஒன்றையும் அறிவித்துள்ளது.  அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆக இருக்கும் என்றும், இந்த கட்டண உயர்வு டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ சேவையை துவக்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.