வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (22:06 IST)

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி கடன்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு 2600 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உள்கட்டமைப்பு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது 
 
ஆசிய பசுபிக் பிராந்திய பகுதிகளில் நடைபெறும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகளுக்கு ஏ.ஐ.ஐ.பி என்ற வங்கி கடன் வழங்கி நிதி உதவி செய்து வருகிறது என்பது தெரிந்ததே 
அந்தவகையில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை அமையவிருக்கும் சென்னையின் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 2600 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
 
சமீபத்தில் சென்னை வந்த இந்த வங்கியின் துணைத் தலைவர் மெட்ரோ ரயில் திட்டங்களை ஆய்வு செய்து முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சரை சந்தித்து பேசியிருந்தார் என்பது தெரிந்ததே