1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஜூலை 2021 (15:57 IST)

தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை: தமிழக அரசு

தேனி சிவகங்கை மருத்துவ கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழக அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது 
 
தேனி சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் பொருத்தமான இடத்தை தேர்வு செய்வதுடன் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் தற்காலிகமாக தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்து இருக்கிறது. எய்ம்ஸ் நிர்வாகம் ஆய்வு செய்து பொருத்தமான இடத்தை தேர்வு செய்தால் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் தமிழக அரசு கூறியிருக்கிறது 
 
இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்தபோது இந்த தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.