செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 ஜூலை 2021 (09:13 IST)

வீரியமடையும் கொரோனா வைரஸ்; மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையா? – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு சாத்தியமுள்ளதாக கூறப்படும் நிலையில் கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டியது வரலாம் என எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் ஓய்ந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் கொரோனா வேரியண்டுகள் வேகமாக உருமாறி வருவதால் இந்தியாவில் மூன்றாம் அலைக்கான பாதிப்பும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்து பேசியுள்ள எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர், இந்தியாவில் உருமாற்ற கொரோனாவின் வீரியம் அதிகரிப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளோடு நிறுத்தி விடாமல் மூன்றாவது டோஸ் போட வேண்டிய தேவை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.