அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று தெரிவித்தார்
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒரு அணியில் இருந்து திமுகவை வீழ்த்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அதற்கு சில தலைவர்கள் மட்டுமே தடையாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்
அதிமுக தொண்டர்கள் விழிப்படைந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் 2026 தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்து இரட்டை இலை காணாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார்
கடந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக சில தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்றும் இப்போதும் அதிமுக பொறுப்பில் இருப்பவர்கள் ஜெயலலிதாவாக முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டால் மட்டும்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்றும் அதுதான் அந்த அணிதான் திமுகவுக்கு மாற்று சக்தியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Edited by Mahendran