செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:34 IST)

திமுக அரசுக்கு சாபமிட்ட அதிமுக உறுப்பினர்கள்.

karur
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய குழு தலைவர், அதிகாரிகள், திமுக அரசு நாசமா போய்விடும், மண்ணோடு மண்ணாக போகி விடுவீர்கள் என நெஞ்சில் அடித்துக் கொண்டு சாபமிட்ட அதிமுக உறுப்பினர்கள்.
 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு 20 உறுப்பினர்களைக் கொண்டது.
 
இந்த ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த சந்திரமதி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சந்திரமதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதில் அவர் பதவி இழந்தார்.
 
தற்போது திமுகவைச் சேர்ந்த சுமித்திராதேவி ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.
 
கடந்த மாதம் தமிழக அரசிடம் இருந்து வரப்பெற்ற நிதியை அதிமுக  சேர்ந்த 4 கவுன்சிலர்கள் தவிர திமுகவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்களுக்கும், பாஜகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலர் பகுதிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அதிமுக பெண் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
 
இன்று  கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தொடர்ந்து இரண்டு முறை நிதி ஒதுக்காத காரணத்தால் அதிமுக பெண் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அழுது கொண்டு, எங்களது வார்டு உட்பட்ட  பொதுமக்களிடம் திட்டு வாங்கிக் கொண்டும், அடிவாங்கும் நிலைக்கு தள்ளிய திமுக அரசு,  திமுக குழு ஒன்றிய தலைவர், அதிகாரிகள் திமுக ஆட்சியை என நீங்க எல்லாம் நல்லா இருக்க மாட்டீர்கள், மண்ணாக போய்விடுவீர்கள், நாசமா போயிடுவீர்கள் என்று கூறி சாபவிட்டதால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.