வெள்ளி, 21 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:55 IST)

கடைசி நேரத்தில் மனுவை வாபஸ் பெற்ற வேட்பாளர்: அதிமுகவினர் சாலைமறியல்!

கடைசி நேரத்தில் அதிமுக வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதையடுத்து அதிமுகவினர் சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ இன்று வேட்புமனுத்தாக்கல் வாபஸ் பெறும் நேரம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வாபஸ் பெற்றார் 
 
இதனை அடுத்து திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அவர் வாபஸ் பெற்றதால் அதிமுகவினர் சாலை மறியல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனையடுத்து காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தி வெளியேற்றி வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ 18-வது வார்டில் வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது