1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (10:51 IST)

மீண்டும் இ-பாஸில் திருமணம் ஆப்ஷன் நீக்கம்! – குழப்பத்தில் மக்கள்!

தமிழக இ-பாஸ் ஆன்லைன் தளத்தில் திருமணம் என்ற வசதி சேர்க்கப்பட்ட நிலையில் மீண்டும் நீக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் அவசியம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் தளத்தில் விண்ணப்பிப்பதற்கு திருமண காரியங்களுக்கு செல்வது என்ற வசதி நேற்று நீக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த விளக்கத்தில் திருமணம் என்ற ஆப்ஷனை பலர் தவறாக பயன்படுத்துவதாகவும், அதிகளவில் திருமணம் என்ற வசதியை பயன்படுத்தி இ-பாஸ் பெறுவதாலும் இந்த வசதி நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் திருமணம் என்ற ஆப்ஷன் இ-பாஸ் விண்ணப்ப தளத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. மருத்துவம், முதியவர்களை பேணுதல், இறப்பு தொடர்பான காரியங்களுக்கு மட்டுமே இ-பாஸ் தளத்தில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.