விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இத்தனை தொகுதிகளா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலுக்காக அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க திமுக முடிவு செய்து அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. சிதம்பரம் தொகுதி மட்டும் விசிகவிற்கு உறுதியாகிய நிலையில் திருவள்ளூர் அல்லது விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் ஒரு தொகுதி என மொத்தம் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.