1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (08:30 IST)

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: பஸ் பாஸ் தேவையில்லை என அறிவிப்பு

51 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்
 
கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பதை ஒருவாரம் தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று புதுவை முதல்வர் ஜூன் 10ஆம் தேதி புதுவை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார். ஆனால் ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது உறுதி என தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட கூறினார்.
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இன்றே மாணவர்களுக்கு புதிய சீருடையும் பாடபுத்தகங்களும் வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் கிடைக்க ஒருசில நாட்கள் ஆகலாம் என்பதால் மாணவர்கள் தங்களுடைய பழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மாணவர்கள் சீருடையில் இருந்தாலே போதும் அவர்களிடம் கட்டணமோ, பஸ் பாஸோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது