மின் கட்டணத்தை அடுத்து சேவைக்கட்டணமும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்
தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் தற்போது புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் மற்றும் சேவை கட்டணம் மின் மீட்டர் பொருத்தும் கட்டணம் ஆகியவை இரு மடங்கு உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மின்கம்பங்கள் மூலம் மின்சாரம் வினியோகிக்க பகுதிகளில் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750 என உயர்ந்துள்ளதாகவும், இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 என உயர்ந்துள்ளதாகவும், பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200 என உயர்ந்துள்ளதாகவும், வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.2,800 என உயர்வு
வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 என உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில்
ஒருமுனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.200 என உயர்ந்துள்ளதாகவும், வளர்ச்சிக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் என உயர்ந்துள்ளதாகவும், இணைப்புக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 என உயர்ந்துள்ளதாகவும், மீட்டர் காப்பீடு கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.750 என உயர்ந்துள்ளதாகவும், வைப்புத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 என உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.