புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (08:44 IST)

23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம்: ஒகேனக்கல் பகுதியில் பரபரப்பு

கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் வரலாறு காணாத கனமழையால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதிலும் இருந்து அம்மாநிலத்திற்கு நிவாரண உதவிகள் குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஒகேனக்கலில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சமீபத்தில் ஒகேனக்கலில் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் இருந்த தடுப்புகம்பிகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. ஒகேனக்கலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
 
கர்நாடகா மாநிலத்தில் மேலும் மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால் ஒக்கேனக்கல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
23 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறையும், 58 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறையும் இதேபோன்ற வெள்ளப்பெருக்கு ஒகேனக்கல் பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து தற்போதுதான் இந்த அளவு தண்ணீர் ஒகேனக்கல் அருவியில் வந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்