வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (15:34 IST)

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை.... வீட்டின் கூரை மேல் இருக்கும் வீடியோ !

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்குப் பருவமழையின் காரணமாக பெருவாரியான இடங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல குடியிறுப்பு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளனர். குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள ரேபேக் தாலுக்காவில் பல வீடுகள் மூழ்கியுள்ளன.
 
இதில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று வீட்டின் மேற்கூரை மீது அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.