திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (17:29 IST)

சென்னையில் பறந்த தாலிபன் கொடி: ஒலிம்பியாட்-ல் சர்ச்சை!

ஆப்கானிஸ்தான் உட்பட 199 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுகளுக்கு திரண்டுள்ளனர்.


சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள், தலிபான் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி, அதிகாரப்பூர்வமான முன்னாள் ஆப்கானிஸ்தான் குடியரசின் முன்னாள் மூவர்ணக் கொடியின் கீழ் சர்வதேச விளையாட்டு போட்டியில் விளையாடி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இயக்குநர் ஜெனரலும், உளவுத்துறையின் செயல் இயக்குநரும், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவருமான அகமதுல்லா வாசிக், குழு உறுப்பினர்களில் ஒருவரின் புகைப்படத்தை ட்வீட் செய்தபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இது இரு நாடுகளுக்கும் (இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்) இடையிலான நல்லுறவைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், செஸ் ஒலிம்பியாட் 2022 இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆப்கானிஸ்தானின் அணியானது ஆப்கானிஸ்தானின் முன்னாள் மூவர்ணக் கொடியின் கீழ் விளையாடுகிறது. நாங்கள் இரண்டு கொடிகளையும் பயன்படுத்துகிறோம். மைதானத்தின் உள்ளே பழைய கொடியைப் பயன்படுத்துகிறோம், ஆனால் பிரதான மைதானத்திற்கு வெளியே வெள்ளைக் கொடியைப் பயன்படுத்துகிறோம். எங்களுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆப்கானிஸ்தான் தேசிய செஸ் கூட்டமைப்பின் தலைவர் குரைஷி ஒபைதுல்லா தெரிவித்தார்.

இந்தியா தலிபான் இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டையோ அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை, எனவே வெள்ளைக் கொடியைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. புதுதில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் கூட பழைய கொடியையே பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.