திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (11:38 IST)

உயிரிழக்கும் நிலையிலும் 50 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் !

driver dead
சென்னை – திருப்பதி சென்று கொண்டிருந்த ஆந்திர அரசுப் பேருந்தின் ஓட்டுனருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால்  சாலையோரமாக பேருந்தை நிறுத்திவிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – திருப்பதி சென்று கொண்டிருந்த ஆந்திர அரசுப் பேருந்தின் ஓட்டுநர்  அருணாச்சலத்திற்கு திடீரென்று  நெஞ்சு வலி ஏற்பட்டது. பேருந்து  ஓட்டுனர் தடுமாறுவதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், ஓட்டுனர், பத்திரமாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, ஸ்டியரிங் மீது சாய்ந்து உயிரிழந்தார்.

மாரடைப்பு வந்து உயிரிழக்கும்  நிலையிலும், 50 பயணிகளை காப்பாற்றிய டிரைவருக்கு பயணிகள் இரங்கல் தெரிவித்தனர்.